கவனம் ஈர்க்கும் ராஜு முருகனின் பராரி டீசர்!
பராரி படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.
இயக்குநர் ராஜு முருகன் மற்றும் எஸ்பி சினிமாஸ் வழங்கும் 'பராரி’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
'குக்கூ', 'ஜோக்கர்', 'ஜிப்ஸி', 'ஜப்பான்' போன்ற பல படங்களை இயக்கிய இயக்குநர் ராஜு முருகன் எஸ்பி சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் படம் 'பராரி'.
ராஜு முருகனிடம் உதவி இயக்குநராக இருந்த எழில் பெரியவேடி இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் பராரி.
பிழைப்பிற்காக தங்களது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயரும் மக்களின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்
இப்படத்தில் ‘தோழர் வெங்கடேசன்’ படத்தில் நடித்து கவனம் ஈர்த்த ஹரிசங்கர் கதாநாயகனாகவும், புதுமுகம் சங்கீதா கல்யாண் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். பரியேரும் பெருமாள் படத்திற்க்கு ஒளிப்பதிவு செய்த ஸ்ரீதர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பராரி படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.