சசிகுமாரின் வதந்தி - 2 டீசர்!
வதந்தி - 2 டீசர் வெளியானது...
நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவான வதந்தி - 2 திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் நடிகர்கள் சசிகுமார், அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் வதந்தி - 2 இணையத் தொடரில் நடித்துள்ளனர்.
இயக்குநர் புஷ்கர் - காயத்ரி இணையின் மேற்பார்வையில் உருவான இத்தொடர், முதல் பாகத்தைப் போன்றே கொலை வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியின் மனப்போராட்டங்களாக உருவாகியுள்ளது.
Advertisement
Advertisement
இதில், நடிகர் சசிகுமார் மூசா ராஸா என்கிற காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். மதுரையைப் பின்னணியாகக் கொண்டு கதைக்களம் உருவாகியுள்ளது.
இத்தொடர் விரைவில் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், இதன் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.