நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ரணபலி டீசர்!
ரணபலி திரைப்படத்தின் டீசர் வெளியானது...
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான ரணபலி திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ராகுல் சங்கிருதயன் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா புதிய திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் வரலாற்று பின்னணியில் தயாராகிவரும் இப்படத்தில் நாயகியாக ரஷ்மிகா நாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ரணபலி எனப் பெயரிட்டுள்ளனர். இதன் அறிவிப்பு விடியோ மற்றும் போஸ்டர்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இப்படம் இந்தாண்டு அக். 16 ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இதன் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தென்னிந்தியாவில் ஏற்பட்ட பஞ்சம், ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்க்கும் நாயகன் என காட்சிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. விஜய் தேவரகொண்டாவின் தோற்றமும் உடல்மொழியும் கவனம் பெற்று வருகிறது.
The teaser for the film Ranabali, starring actor Vijay Deverakonda, has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.