FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அன்பான ரசிகர்களே ரெடியா?சூர்யா - 47 அப்டேட்!

நடிகர் சூர்யாவின் 47-வது திரைப்படத்தின் புதிய அறிவிப்பு...

8 செப்டம்பர் 2026, 6:03 pm IST
பகிர்:

நடிகர் சூர்யா நடிப்பில் உருவான அவரது 47-வது திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

சூர்யா தன் 47-வது படமாக இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை, சூர்யாவே தன் புதிய தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் மூலம் தயாரித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு கேரளம், சென்னை பகுதிகளில் நடைபெற்று அண்மையில் முழுமையாக நிறைவடைந்ததாக விடியோ வெளியிட்டு அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு சூர்யா - 47 திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டனர். மேலும், இப்படத்திற்கு ‘சீனு’ எனப் பெயரிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இப்படத்திற்காக நடிகர் சூர்யாவின் தோற்ற போஸ்டர் நாளை (செப். 9) மாலை 6 மணிக்கு வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது வெறும் போஸ்டரா இல்லை கிளிம்ஸ் விடியோவா என்பதும் நாளையே தெரியவரும் என்பதால் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

An update regarding actor Suriya's 47th film has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments