இந்தியன் - 3 அதிகாரப்பூர்வ அப்டேட்!
இந்தியன் - 3 திரைப்படத்தின் அப்டேட்...
நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகும் இந்தியன் - 3 திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கிய இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று தோல்விப்படமானது.
லஞ்சம் மற்றும் ஊழலை மையமாகக் கொண்டு உருவான இப்படம் இணைய கிண்டல்களையும் எதிர்கொண்டது. ஆனாலும், அதில் இடம்பெற்ற இந்தியன் - 3 டிரைலர் ரசிகர்களைக் கவர்ந்தது.
Advertisement
Advertisement
மேலும், இந்தியன் - 2 தோல்வியால் இந்தியன் - 3 படப்பிடிப்பில் மேற்கொண்டு செலவு செய்ய லைகா விரும்பாததால் படத்தைக் கைவிடும் திட்டத்தில் இருப்பதாகத் தகவல்கள் பரவின்.
ஆனால், இப்படத்தின் பணிகளை இயக்குநர் ஷங்கரும் நடிகர் கமல் ஹாசனும் மேற்கொண்டு வருகின்றனர். இதனால், இப்படத்தை விரைவில் வெளியிடும் பணிகளையும் லைகா மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில், வார் மூட் (War mode) என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்தியன் - 3 திரைப்படத்தில் கமல் ஹாசனுடன் காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரிஷிகாந்த் ஆகியோர் நடிக்கின்றனர்.
A new update regarding the film Indian 3, starring Kamal Haasan, has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.