FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சண்டியர் படப்பிடிப்பு ஆரம்பம்!

நடிகர் கமல் ஹாசனின் புதிய திரைப்பட அப்டேட்...

21 வினாடிகள் முன்பு
நடிகர் கமல் ஹாசன்
பகிர்:

நடிகர் கமல் ஹாசன் நடிக்கும் சண்டியர் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது.

நடிகர் கமல் ஹானின் புதிய திரைப்படத்தை இயக்குநர் சு. அருண் குமார் இயக்குகிறார். இப்படத்திற்கு சண்டியர் எனப் பெயரிட்டுள்ளனர். முழு ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைப் பயிற்சியாளர்களாக பணியாற்ற உள்ளனர்.

மதுரையைப் பின்னணியாக வைத்து இதன் கதை எழுதப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. விருமாண்டி திரைப்படத்திற்கு முதலில் சண்டியர் என்றே கமல் ஹாசன் பெயரிட்டிருந்தார். ஆனால், அன்று கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் பெயரை மாற்றினார்.

Advertisement

Advertisement

தற்போது, மீண்டும் சண்டியர் திரைப்பட பெயருடன் வந்துள்ளார். இதனைக் கண்டித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, “எம்பியாக உள்ள கமல், சாதி மற்றும் மதம் சார்ந்து செயல்படக் கூடாது. தான் எடுத்த உறுதிமொழிக்கு மாறாக அவர் செயல்படுகிறார். 'சண்டியர்' படத்தை கமல் எடுக்கவும் முடியாது, அதைத் தமிழ்நாட்டில் திரையிடவும் முடியாது. யாரோ சிலரின் தூண்டுதலின் பே பேரில்தான் சண்டியர் படத்தை அவர் அறிவித்துள்ளார். அந்தப் படத்தை அவர் எடுக்கக் கூடாது” எனக் கூறியுள்ளார்.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குவதாக தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. நடிகர் கமல் ஹாசனின் பிறந்த நாளில் வந்த இந்த அறிவிப்பு ரசிகர்களிடம் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

Filming for the movie Sandiyar, starring actor Kamal Haasan, has begun.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.