கமல் ஹாசன் - அருண் குமார் படத்தின் அப்டேட்!
நடிகர் கமல் ஹாசனின் புதிய திரைப்படத்தின் அப்டேட்...
நடிகர் கமல் ஹாசன் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு நாளை வெளியாகின்றது.
மாநிலங்களவை உறுப்பினரும், நடிகருமான கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்தின் “தர்மன்” திரைப்படம் உருவாகி வருகின்றது.
இதையடுத்து, சுமார் 47 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இணைந்து நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குகிறார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கமல் ஹாசன் தயாரித்து நாயகனாக நடிக்கும் மற்றொரு புதிய படத்தை, “சித்தா”, “வீரதீர சூரன்” ஆகிய படங்களின் இயக்குநர் சு. அருண் குமார் இயக்குகின்றார்.
இந்தப் படத்தின் முதல் பார்வை உள்ளிட்ட அறிவிப்புகள் வரும் வெள்ளிக்கிழமை (நவ. 6) மாலை வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் இன்று (நவ. 5) அறிவித்துள்ளது.
காவல்துறை சார்ந்த படமாக இருக்கக் கூடும் எனக் கருதப்படும் இந்தப் படத்தின் லுக் டெஸ்ட் எடுத்த புகைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.
இத்துடன், நடிகர் கமல் ஹாசன் வரும் சனிக்கிழமை தனது 72 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ள நிலையில், இந்தப் புதிய படத்தின் அப்டேட் வெளியாவது குறிப்பிடத்தக்கது.