FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நானா படேகர் இயற்கை சக்தியைப் போன்றவர்: கமல் ஹாசன்

இரங்கல் குறிப்பை வெளியிட்ட கமல் ஹாசன்...

23 வினாடிகள் முன்பு
நடிகர்கள் கமல் ஹாசன், நானா படேகர்.
பகிர்:

நடிகர் நானா படேகர் மறைவுக்கு நடிகர் கமல் ஹாசன் உருக்கமான இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

நடிகர் நானா படேகர் வியாழக்கிழமை (அக். 8) அதிகாலை காலமானார். கோவாவில் உள்ள தனது இல்லத்தில் இருந்தபோது அவருக்கு திடீரென கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு மயங்கிய நிலையில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. இவரது திடீர் மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் கமல் ஹாசன், ”நானா படேகரின் மறைவு செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது. அவர் ஒரு அபாரமான கலைஞர் மட்டுமல்ல; அதைவிட சிறந்த மனிதராகவும் திகழ்ந்தார். அவர் ஒரு இயற்கை சக்தியைப் போன்றவர். தன்னைச் சுற்றியிருந்தவர்களின் வாழ்க்கையை உயர்த்தியவர்.

Advertisement

Advertisement

திரைத்துறையைத் தாண்டி, மகாராஷ்டிர விவசாயிகளுக்கு அவர் செய்த உதவிகளும், கார்கில் போரின்போது அவர் ஆற்றிய தன்னார்வ சேவையும், அவரது ஆழமான கடமை உணர்வை வெளிப்படுத்துகின்றன.

அவரது குடும்பத்தினருக்கும், அவரை நேசிக்கும் எண்ணற்ற ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Actor Kamal Haasan has expressed his heartfelt condolences on the passing of actor Nana Patekar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments