முகப்பு
தற்போதைய செய்திகள்

எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகள் பற்றி கவலை இல்லை: முதல்வா் மு.க.ஸ்டாலின்

அதிமுக பொதுச்செயலாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமியின் குற்றச்சாட்டுகள் குறித்து கவலை இல்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின்

Updated On : 1 டிசம்பர், 2024 at 1:47 PM
சீனிவாசன் நகரில் உள்ள நகர ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு, ஆய்வு செய்து அங்குள்ள மருத்துவர்களிடம் மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களுக்கான மருந்துகளை கையிருப்பில் வைத்துக்கொண்டு, உரிய சிகிச்சை அளிக்க முதல்வர் அறிவுறுத்தினார்.
பகிர்:

சென்னை: அதிமுக பொதுச்செயலாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமியின் குற்றச்சாட்டுகள் குறித்து கவலை இல்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரமணாக தொடர்ந்து மழை பெய்து வருவதையொட்டி, கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்டப்

பகுதிகளில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கொளத்தூா் தொகுதிக்குட்பட்டப் பகுதிகளில் மழைநீர் வெளியேற்றும் பணிகளை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement

கொளத்தூர், செல்வி நகர் பகுதியில் மழை நீரை அகற்றுவதற்காக பெருநகர சென்னை மாநகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள 1.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மழைநீர் சேகரிப்பு தொட்டியில் சேகரிக்கப்படும் மழை நீரானது, நெடுஞ்சாலைத்துறையின் மழை நீர் வடிகாலில் மோட்டார் பம்ப் மூலம் வெளியேற்றம் செய்யப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், இவ்விடத்தில் மழைநீர் வெளியேற்றம் செய்யப்பட்டு, இப்பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்குமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அலுவலர்களுக்கு உத்திரவிட்டார்.

சீனிவாசன் நகர், நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு அதைத் தொடர்ந்து, சீனிவாசன் நகரில் உள்ள நகர ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு, ஆய்வு செய்து அங்குள்ள மருத்துவர்களிடம் மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களுக்கான மருந்துகளை கையிருப்பில் வைத்துக்கொண்டு, உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தினார்.

ஜி.கே.எம். காலனியில் குளம் மேம்படுத்தும் பணி மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய உந்து நிலையம் ஆய்வு

அதனைத் தொடர்ந்து, கொளத்தூர், ஜி.கே.எம். காலனியில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய உந்து நிலையத்தின்

செயல்பாட்டினையும், 24 “A” சாலையில் உள்ள குளத்தினை மேம்படுத்தும் பணிகளையும் முதல்வர் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனைக்கு நேரில் சென்று, அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களிடம் மின்தடை ஏற்பட்டால் ஜெனரேட்டர் வசதிகளையும், அவசிர சிகிச்சைக்கான மருந்துப்பொருட்கள் போன்ற அத்தியாவசிய ஏற்பாடுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும், இந்த மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்றுவருபவர்களிடம் அவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் மருந்துகள் குறித்தும், அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது, அமைச்சர்கள் கே.என். நேரு, பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, ஆர்.கிரிராஜன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ப. ரங்கநாதன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன்,சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் நீரேற்று வாரிய மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், நகர்

ஊரமைப்பு இயக்ககத்தின் இயக்குநர் பி. கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகள் பற்றி கவலை இல்லை

பின்னா், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தி முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைநகர் தத்தளிக்கவும் இல்லை, தப்பிக்கவும் இல்லை, நிம்மதியாக உள்ளது. தண்ணீர் தேங்கிய பழைய விடியோக்களை பரப்பி வருகின்றனர். மக்கள் பாதுகாப்பாக உள்ளனர். வானிலை முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம், திண்டிவனத்தில் மழை பெய்யும் என எதிர்பார்க்கவில்லை என முதல்வர் கூறினார்.

பின்னர், மழை பாதிப்புகள் தொடா்பாக எடப்பாடி பழனிசாமி வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து முதல்வரிடம் செய்தியாளா் ஒருவா் எழுப்பிய கேள்வி, எடப்பாடி பழனிசாமிக்கு குற்றச்சாட்டுகளை வைப்பதே வேலையாகிப் போய்விட்டது. அவா்கள் குற்றச்சாட்டுகளை நாங்கள் மதிப்பதும் இல்லை. கலைப்படுவதும் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments