பிரதமர் சியாவொஸி சொவாலேனி 
தற்போதைய செய்திகள்

டோங்கா: பிரதமர் பதவி விலகல்!

டோங்கா நாட்டின் பிரதமர் பதவி விலகியதைப் பற்றி...

DIN

டோங்கா: தெற்கு பசிபிக் பெருங்கடலிலுள்ள தீவு நாடான டோங்கா ராஜியத்தின் பிரதமர் சியாவொஸி சொவாலேனி இன்று காலை பதவி விலகினார்.

தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கான விருப்பமனு கடந்த நவம்பர் 23ஆம் தேதி அந்நாட்டு சட்டப்பேரவையின் சபாநாயகரிடம் சமர்பிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, அந்நாட்டு பாராளுமன்றத்தில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சொவாலேனி தாமாக முன்வந்து தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

இதுகுறித்து பிரதமர் சியாவொஸி சொவாலேனி, அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தனது பதவியை ராஜிநாமா செய்வதாகக்கூறி தனது பாராளுமன்ற உரையை முடித்துக்கொண்டார்.

பதவி விலகலுக்கான காரணம் குறித்தும் அடுத்த பிரதமர் யார் என்பது குறித்தும் இன்னும் தெரிவிக்கப்படாத நிலையில், அந்நாட்டு மன்னர் டுபோவிற்கும் பிரதமர் சொவாலேனியின் அரசிற்கும் இடையே கடினப் போக்கு நிலவியதாகக் கூறப்படுகிறது.

இன்னும் சில மாதங்களில் டோங்கா நாட்டில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டுமுதல் பிரதமராக பதவி வகித்த சியாவொஸி சொவாலேனி தற்போது ராஜிநாமா செய்துள்ளார்.

ஏற்கனவே கடந்த 2023 செப்டம்பர் மாதம் நடந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் அவரது தலைமை தப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT