ஜம்மு: கண்ணிவெடித் தாக்குதலில் ஆந்திரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் பலியானார்.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தின் ரவிப்பாடு கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரரான வரிகுண்டல வெங்கட சுப்பையா (வயது 44) 25வது ராஷ்ட்ரியா ரைஃபில்ஸ் பட்டாளத்தில் ஹவில்தாராக பணியாற்றி வந்தார்.
கடந்த திங்களன்று ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஹவில்தார் சுப்பையா பயங்கரவாதிகளினால் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியின் மீது கால் வைத்ததில் அது வெடித்து படுகாயம் அடைந்துள்ளார்.
இதையும் படிக்க: சாய் சுதர்சனுக்கு அறுவைச் சிகிச்சை..! பிசிசிஐ-க்கு நன்றி!
படுகாயமடைந்த அவருக்கு உடனடியாக மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டது, இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
உயிரிழந்த ஹவில்தார் சுப்பையாவுக்கு தாயார், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சுப்பையா இறந்த செய்தியை நேற்று ராணுவ அதிகாரிகள் அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்தனர்.
இந்நிலையில், அவரது உடல் அவரது மனைவின் சொந்த ஊரான அனந்தபூர் கிராமத்தில் கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்கு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.