சூப்பர்ஸ்டார் ரஜிகாந்த்-முதல்வர் மு.க.ஸ்டாலின் 
தற்போதைய செய்திகள்

ரஜினி பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

அருமை நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜிகாந்துக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

DIN

சென்னை: அருமை நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜிகாந்துக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், எல்லைகள் கடந்து ஆறிலிருந்து அறுபதுவரை அனைவரையும் தன்னுடைய நடிப்பால் - ஸ்டைலால் ரசிகர்களாக்கிக் கொண்ட அருமை நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜிகாந்துக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் தாங்கள், எப்போதும் அமைதியோடும் மனமகிழ்ச்சியோடும் திகழ்ந்து மக்களை மகிழ்வித்திட விழைகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சூப்பர்ஸ்டார் ரஜிகாந்த் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு திரையுலகினர், பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

SCROLL FOR NEXT