கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

வாயு கசிவினால் 10 மாணவர்கள் மயக்கம்!

ஜெய்ப்பூரில் பயிற்சி மையம் ஒன்றில் எற்பட்ட வாயு கசிவினால் 10 மாணவர்கள் மயக்கமடைந்ததைப் பற்றி..

DIN

ராஜஸ்தான்: ஜெய்ப்பூரின் மஹேஷ் நகரிலுள்ள தனியார் பயிற்சி மையத்தில் வாயு கசிவினால் மயக்கமடைந்த 10 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (டிச.15) மாலை அந்தப் பயிற்சி மையத்தில் பயிலும் மாணவர்களில் 10 பேருக்கு கடுமையான தலைவலியும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த மாணவர்கள் அனைவரும் மயக்கமடைந்ததினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், முதற்கட்டமாக வாயு கசிவுக்கான காரணங்கள் குறித்து விசாரணையைத் துவங்கினர். முதலில், அந்தப் பயிற்சி மையத்தின் மேல் தளத்திலுள்ள சமையல் கூடத்திலிருந்து வெளியானதா என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில் பின்னர் அது இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், தொடர் இருமல் மற்றும் மூச்சுத்திணறலினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் தற்போது நலமாக உள்ளதாக அந்த மருத்துவமனைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்குள் இந்தச் சம்பவம் குறித்தச் செய்தி காட்டுத்தீப் போல பரவியதைத் தொடர்ந்து மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியதாகக்கூறி அந்த பயிற்சி மையத்தை அங்கு பயிலும் மாணவர்களின் பெற்றோர்களும் பொதுமக்களும் முற்றுகையிட்டனர். பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மாணவர்களுக்கு ஏற்பட்ட திடீர் மயக்கத்திற்கான காரணம் தற்போதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத நிலையில் அந்தப் பயிற்சி மையத்திற்கு அருகிலிருக்கும் வடிகாலில் இருந்து வெளியான வாயு காரணமாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“முதல்வர் மீது Thiruma-வுக்கு நம்பிக்கை இல்லை!”: Nainar Nagendran | DMK | VCK

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர் MK Stalin! | DMK

“நம் சமுதாய அமைப்பு அப்படி!” ஆணவக்கொலைகள் குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் பதில்!

இந்தியா தனது ருத்ர தாண்டவத்தைக் காட்டியது: வாரணாசியில் மோடி பேச்சு

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 9

SCROLL FOR NEXT