முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னை, புறநகரில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பில்லை!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானிலை தொடர்பாக...

Updated On : 17 டிசம்பர் 2024, 8:24 am IST
சென்னை, புறநகரில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பில்லை!
பகிர்:

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று(டிச. 17) பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்பில்லை என்று தமிழ்நாடு வெதர்மென் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இன்றைய வானிலை நிலவரம் தொடர்பாக தமிழ்நாடு வெதர்மென் என்றழைக்கப்படும் பிரதீப் ஜான் தெரிவித்ததாவது:

வடதமிழக கடலோர மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பில்லை. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று மாலை/இரவு நேரங்களில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். நாளை மழை நிலவரம் தொடர்பாக பிறகு தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

இதையும் படிக்க: உருவானது புயல்சின்னம்: வடமாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை

வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாகியுள்ளது.

இது, தமிழக கடற்கரையை நோக்கி நகா்ந்து வருவதால் செவ்வாய், புதன்கிழமைகளில் (டிச.17,18) சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.