புதிய தொடரில் இருந்து விலகிய கண்மணி மனோகரன்!
ராகவி தொடரில் இருந்து கண்மணி மனோகரன் விலகல்.
புதிய தொடரான ராகவி தொடரில் இருந்து கண்மணி மனோகரன் விலகியுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
சன் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள ராகவி எனப் பெயரிடப்பட்டுள்ள இத்தொடரில் நடிகை கண்மணி மனோகரன் நடிக்கவுள்ளதாக முன்னதாக தகவல் வெளியானது.
இத்தொடரில் சுந்தரி தொடர் பிரபலம் ஜிஷ்ணு, தேஜஷ்வினி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். வாணி ராணி தொடரில் இணைந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அருண்குமார் - நீலிமா ஜோடி இத்தொடரில் பிரதானப் பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ராகவி தொடரில் நடிப்பதற்கு ஒப்பந்தமான கண்மணி மனோகரன் இத்தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
முன்னதாக, கண்மணி மனோகரன் மகாநதி தொடரில் இருந்து விலகிய நிலையில், ராகவி தொடரில் இருந்தும் விலகியுள்ளது அவரது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராகவி தொடரில் கண்மணி மனோகரனுக்குப் பதிலாக நடிக்கவுள்ள நடிகை யார் என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.