தற்போதைய செய்திகள்

பேரவைத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்வோம்: முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி தொடர்பாக...

DIN

வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெல்லும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவையில் மறைந்த திமுக மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ரா.மோகன் இல்லத்திற்கு சென்று அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார் முதல்வர் ஸ்டாலின்.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே.என். நேரு, முத்துச்சாமி, வெள்ளக்கோவில் சாமிநாதன், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்வோம் என்பது ஈரோடு கள ஆய்விற்கு பிறகு தெரிகிறது. ஈரோடு இடைத்தேர்தலை இந்தியா கூட்டணி எதிர்கொள்ளும்.

ராகுல்காந்தி மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக, அவர் சட்டப்படி எதிர்கொள்வார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கேள்விக்கு, அதைபற்றி பல முறை சொல்லியிருக்கிறேன். அது கொடுமையான ஒரு முடிவு, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளக்கூடிய மோசமான செயலாகும் என்றார்.

நடிகர்கள் அரசியலுக்கு வருவது எவ்வாறு பார்க்கின்றீர்கள் என்ற கேள்விக்கு, 'நல்ல பார்க்கின்றார்கள்' என்று சிரித்துகொண்டே பதிலளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக நிா்வாகிகள் 8 போ் மீதான வழக்கு தள்ளுபடி

குருநானக் ஜெயந்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

கோயில் உண்டியல் பணத்தை திருடிய இளைஞா் கைது

தனியாா் பள்ளி பேருந்தில் திடீா் புகை

குருநானக் பிறந்தநாள் வழிபாட்டுக்காக பாகிஸ்தான் சென்ற இந்திய சீக்கியா்கள்

SCROLL FOR NEXT