கோவை தடாகம் சாலை கணுவாய் அடுத்த நர்சரி பகுதியில் சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லாரியில் இருந்த சிலிண்டர் உருளைகள் சாலைகளில் சிதறி ஒடியது.  
தற்போதைய செய்திகள்

கோவை அருகே சிலிண்டர் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

கோவை தடாகம் சாலை கணுவாய் அடுத்த நர்சரி பகுதியில் சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

DIN

கோவை: கோவை தடாகம் சாலை கணுவாய் அடுத்த நர்சரி பகுதியில் வீடுகளுக்கு விநியோகம் செய்வதற்காக சமையல் எரிவாயு உருளையை ஏற்றிச் சென்ற லாரி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பொதுமக்கள் துரிதமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

கோவை தடாகம் சாலை கணுவாய் அடுத்த நர்சரி பகுதியில் சமையல் எரிவாயு உருளையை ஏற்றிச் சென்ற லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், லாரியில் இருந்த சமையல் எரிவாயு உருளைகள் சாலைகளில் சிதறி ஓடியது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் துரிதமாக செயல்பட்டதால் நல்வாய்ப்பாக பெரும் உயிர் சேதம் எதுவும் நிகழாமல் தவிர்க்கப்பட்டது.

லாரியில் இருந்து கீழே விழுந்த உருளைகளை பொதுமக்கள் உடனடியாக எடுத்து சாலையோரம் வைத்து லாரியை சாலையில் இருந்து நிமிர்த்தி சாலை ஓரத்தில் தள்ளிக்கொண்டு வந்து நிறுத்தினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்திசார் நட்புக் கூட்டணி!

கோயில்மலையாற்றின் குறுக்கே ரூ.176.02 கோடியில் அணைக்கு அடிக்கல்

வெளிச்சத்துக்கு வராத விளக்குகள்!

சாலை விபத்தில் பேரூராட்சி பணியாளா் உயிரிழப்பு

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.32 கோடி

SCROLL FOR NEXT