காட்டுத்தீ (கோப்புப்படம்) 
தற்போதைய செய்திகள்

வாரக்கணக்கில் எரியப்போகும் பயங்கர காட்டுத்தீ!

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீ சில வாரங்கள் தொடர்ந்து எரியும்! இதைப்பற்றி...

DIN

ஆஸ்திரேலியா நாட்டின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீயானது இன்னும் சில வாரங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அப்பகுதியிலுள்ள ஆயிரகணக்கான மக்கள் அவர்களது வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தென்கிழக்கு மாநிலமான விக்டோரியாவிலுள்ள கிராம்பியான்ஸ் தேசியப் பூங்காவில் கடந்த திங்கள்கிழமை (டிச.16) மின்னல் தாக்கியதில் ஏற்பட்ட தீயானது தொடர்ந்து வீசிய காற்றினாலும் அப்பகுதியிலுள்ள அதிக வெப்பத்தினாலும் தொடர்ந்து பரவியது. மேலும், கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு நாள்களில் அது மும்மடங்காக பரவியது.

ஏறத்தாழ 300 தீயணைப்பு வீரர்கள் அந்த தீயை அணைக்க போராடி வருவதோடு, ஒரு விமானம் மூலமாகவும் அப்பகுதியில் தண்ணீர் ஊற்றப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்தக் காட்டுத்தீயானது தொடர்ந்து சில வாரங்கள்வரை நீடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதினால், அந்த தேசியப் பூங்காவைச் சுற்றியுள்ள 6 நகரங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் அவர்களது வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டு வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வருகின்ற நாள்களில் அப்பகுதியில் மேலும் வெப்பமும், காற்றும் தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் கணிப்பதினால், அந்தக் காட்டுத்தீ இன்னும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று (டிச.22) காலை கணக்கெடுப்பின் அடிப்படையில் அந்த காட்டுதீயினால் 34,000 ஹெக்டேர் நிலம் எரிந்து நாசமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவின் தீ மற்றும் அவசர சேவைக்கான தேசிய கவுன்சில் வெளியிட்ட பருவகால காட்டுத்தீ அபாயமுள்ள இடங்களுக்கான அறிக்கையில் விக்டோரியாவின் கிராமியன்ஸ் தேசிய பூங்காவும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லையில் 2 நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த டிரம்ப் உத்தரவு!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

SCROLL FOR NEXT