அல்லு அர்ஜுன் (கோப்புப்படம்) 
தற்போதைய செய்திகள்

சிக்கடப்பள்ளி காவல் நிலையத்தில் அல்லு அர்ஜுன் ஆஜர்!

நடிகர் அல்லு அர்ஜுன் சிக்கடப்பள்ளி காவல் நிலையத்தில் இன்று(டிச. 24) ஆஜரானார்.

DIN

நடிகர் அல்லு அர்ஜுன் சிக்கடப்பள்ளி காவல் நிலையத்தில் இன்று(டிச. 24) ஆஜரானார்.

அவர் நடித்த புஷ்பா-2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சி வெளியீட்டின்போது பெண் பலியான விவகாரம் தொடர்பாக அல்லு அர்ஜுன் ஆஜரானார்.

புஷ்பா-2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்ட திரையரங்குக்கு, திடீரென அல்லு அா்ஜுனைக் காண ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 35 வயது பெண் பலியானார். அவரது மகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளாா்.

இதனிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அல்லு அா்ஜுனுக்கு தெலங்கானா உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

இதையடுத்து, பலியான பெண்ணுக்கு நீதி கோரி போராட்டம் நடத்திய உஸ்மானியா பல்கலைக்கழக கூட்டுக் குழுவினா், அல்லு அா்ஜுன் வீட்டை ஞாயிற்றுக்கிழமை தாக்கினா். இதனால், அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அல்லு அர்ஜுனை இன்று(டிச. 24) விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளதைத் தொடர்ந்து, அவர் சிக்கட்பள்ளி காவல்நிலையத்தில் இன்று ஆஜரானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT