கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னம் வலுவிழக்கும்!

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் புயல் சின்னம் தொடர்பாக....

DIN

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் புயல் சின்னம் அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

நேற்று(டிச. 24) தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர – வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று (25-12- 2024) காலை 8.30 மணி அளவில் மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர – வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது.

இது, அடுத்த 24 மணி நேரத்தில், அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக படிப்படியாக வழுவிழக்கக்கூடும்.

இதன்காரணமாக இன்று வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், இதர தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோல்கொண்டா நினைவுகள்... மானசா செளத்ரி!

கிளியோபாட்ராவின் நிழல்... வாணி போஜன்!

வெளியானது மண மகனே பாடல்!

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 24,000 கன அடியாக சரிவு

கர்னூல் பேருந்து விபத்து: குடிபோதை பைக் ஓட்டியே காரணம் - தடயவியல் அறிக்கை

SCROLL FOR NEXT