பென்னாகரம் அண்ணா நகர் காலனி பகுதியில் வங்கிக் கணக்கில் சீரமைப்புத் தொகை வழங்காததால் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள தொகுப்பு வீடுகள். 
தற்போதைய செய்திகள்

பாதியில் நிறுத்தப்படும் தொகுப்பு வீடுகள்: பணி மேற்பார்வையாளரின் மெத்தனப் போக்கே காரணமா?

பெரும்பாலான வீடுகளின் மேற்கூரை சிமென்ட் தளம் பெயர்ந்து விழுந்து சீதளமடைந்து காணப்படுகிறது.

DIN

பென்னாகரம்: பென்னாகரம் பகுதிகளில் அரசின் சார்பில் சீரமைக்கப்பட்டு வரும் தொகுப்பு வீடுகளுக்கான சீரமைப்பு கட்டணத்தினை ஒன்றிய பணி மேற்பார்வையாளர் முறையாக ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வழங்காததால் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டடப்பணிகள் மேற்கொள்ள முடியாமல் பாதியில் நிறுத்தப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு ஒன்றிய பணி மேற்பார்வையாளரின் மெத்தனப் போக்கே காரணம் என பயனாளிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பருவதன அள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட அண்ணா நகர் காலனி பகுதியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட அரசின் தொகுப்பு வீடுகள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இதில் பெரும்பாலான வீடுகளின் மேற்கூரை சிமென்ட் தளம் பெயர்ந்து விழுந்து சீதளமடைந்து காணப்படுகிறது.

இதையடுத்து பழுதடைந்த கான்கிரீட் வீட்டினை சரி செய்ய பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலம், பருவதன அள்ளி ஊராட்சி நிர்வாகத்திடம் ஆணை வழங்கப்பட்டு அதற்கான பணிகளை அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் பயனாளிகள் மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், சீரமைப்புப் பணிகளை ஆய்வு மேற்கொள்ளும் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் தமிழ்செல்வி, முறையாக பணிகளை ஆய்வு மேற்கொள்ளாமல், கட்டடப் பணிகளை மேற்கொண்டு வரும் பயனாளிகள் இதுநாள் வரை பணியை தொடங்கவில்லை என அறிக்கை அளிக்கப்பட்டதால் சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் பணி முடிவுற்றும் அதற்கான சீரமைப்புத் தொகை கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து ஒன்றிய பணி தல மேற்பார்வையாளரிடம் புகார் தெரிவித்தால், முறையாக பதிலளிக்காமல் அலட்சியப் போக்குடன் செயல்படுவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று புகார் அளிக்கும்போது அவர்கள் நாள்களைக் கடத்தும் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

கட்டுமானப் பொருள்களின் விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால் கட்டடப் பணிகளை தொடர முடியாத நிலை ஏற்படுகிறது.

எனவே அண்ணா நகர் பகுதியில் அரசின் தொகுப்பு வீடுகள் சீரமைக்கும் பயனாளிகளை முறையாக கணக்கீடு செய்து, முடிவுற்ற பணிகளுக்கான சீரமைப்புத் தொகையினை வங்கிக் கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிமென்ட் தளம் பெயர்ந்து விழுந்து சீதளமடைந்து காணப்படும் வீடுகளின் மேற்கூரை

இது குறித்து பயனாளி மாதம்மாள் கூறிதாவது:

பருவதன அள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட அண்ணா நகர் பகுதியில் கடந்த 2000 ஆம் ஆண்டு அரசின் சார்பில் தொகுப்பு வீடுகள் வழங்கப்பட்டது. அதனை சீரமைப்பதற்கான ஆணை அண்மையில் பருவதனஅள்ளி ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் பெறப்பட்டு அதற்கான பணிகளை நடந்து வருகிறது.

அண்ணா நகர் பகுதியில் பெரும்பாலான பயனாளிகள் கட்டப்பணிகளை முடித்தும், அதற்கான சீரமைப்புத் தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படாததால் அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்ள முடியாமல் வீடுகளின் கட்டட பணிகள் பாதியில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பயனாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாகவும், இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவிக்கும்போது ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ஆய்வறிக்கை வழங்கவில்லை என தெரிவிக்கின்றனர்.

இதனால் வங்கி கணக்கில் சீரமைப்புப் தொகை செலுத்தாமல் பணிகள் பாதியில் நிறுத்தப்படுகிறது.மேலும் முடிவுற்ற பணிகளுக்கு கூட கணக்கில் முதல் தவணை தொகை கூட செலுத்தாமல் உள்ளனர். இதற்கு ஒன்றிய பணி மேற்பார்வையாளரின் மெத்தனப் போக்கே காரணம் என பயனாளிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

எனவே மாவட்ட ஆட்சியா் உடனடியாக நடவடிக்கை எடுத்து பேரூராட்சியில் அரசின் தொகுப்பு வீடுகள் கட்டி வரும் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் தவணை முறையில் முறையாக பணத்தைச் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னத்தில் அறைந்த ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 9-ஆம் வகுப்பு மாணவா்

முக்கொம்பிலிருந்து 60 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறப்பு

திருமழிசையில் ரூ. 1.24 கோடியில் புதிய பேரூராட்சி அலுவலக கட்டுமான பணி

உழவா் நல சேவை மையம்: மானியத்துக்கு விண்ணப்பிக்க வேளாண் அமைச்சா் அழைப்பு

லிபுலேக் கணவாய்க்கு உரிமை கோரும் நேபாளம்: இந்தியா நிராகரிப்பு

SCROLL FOR NEXT