ரஜினி  கோப்புப் படம்
தற்போதைய செய்திகள்

'மன்மோகன் சிங் ஓர் அற்புதமான மனிதர்' - ரஜினி இரங்கல்!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்.

DIN

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

'மன்மோகன் சிங் அற்புதமான மனிதர், சிறந்த பொருளாதார சீர்திருத்தவாதி, அரசியல் பண்பாளர், அவரின் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்' என்று கூறியுள்ளார்.

மன்மோகன் சிங் மறைவு

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வியாழக்கிழமை (டிச. 26) இரவு காலமானார். அவருக்கு வயது 92.

முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக வியாழக்கிழமை(டிச. 26) இரவு காலமானார்.

தில்லி இல்லத்தில் குடும்பத்தினர் மற்றும் முக்கிய பிரமுகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது உடல் தற்போது காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

2004 முதல் 2014 வரையில் இரு முறை பிரதமராக பதவி வகித்துள்ள மன்மோகன் சிங் நிதித்துறை அமைச்சர், திட்டக்குழு துணைத் தலைவர், பொருளாதார ஆலோசகர், நிதி அமைச்சக செயலா், ரிசா்வ் வங்கியின் ஆளுநர் என பல பதவிகளை வகித்தவர். நாட்டின் பொருளாதார சீா்திருத்தவாதிகளில் முக்கியமானவர் மன்மோகன் சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மடகாஸ்கர் மண்டை ஓடுகளும் மறக்க முடியாத அம்பிகி வெறியாட்டமும்!

பற்றி எரியும் இந்தோனேசியா... நாடாளுமன்றக் கட்டடத்துக்கு தீ வைப்பு! 3 பேர் பலி!

உ.பி.: மது அருந்திய 2 பேர் பலி, ஒருவர் கவலைக்கிடம்!

அதீத வெப்பம்: தாமதமாக நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள்!

மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: மும்பையில் போலீஸாரின் விடுமுறைகள் ரத்து

SCROLL FOR NEXT