தேனி அருகே கோர விபத்து: 3 பேர் பலி, 18 பேர் காயம்
தேனி அருகே ஏற்காட்டுக்கு சுற்றுலா சென்ற வேன் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்,
தேனி: தேனி அருகே ஏற்காட்டுக்கு சுற்றுலா சென்ற வேன் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளம் மாநிலம், கோட்டயைத்தைச் சேர்ந்த சிலர் ஒரு வேனில் ஏற்காட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்களது வேன் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்து கொண்டிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், வேன் மற்றும் கார் அப்பளம் போல் நொருங்கியது.
இதையும் படிக்க | இந்தியாவின் எதிா்காலத்தை வடிவமைத்தவர் மன்மோகன்!
கார் வந்து 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் வேனில் இருந்த 18 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்து விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.