முகப்பு
தற்போதைய செய்திகள்

என் அன்புக்குரிய கேப்டனுக்கு நினைவஞ்சலி: ரஜினிகாந்த்

தேமுதிக தலைவா் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சனிக்கிழமை (டிச. 28) என் அன்புக்குரிய கேப்டனுக்கு நினைவஞ்சலி என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Updated On : 28 டிசம்பர், 2024 at 6:50 AM
பகிர்:

தேமுதிக தலைவா் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சனிக்கிழமை (டிச. 28) என் அன்புக்குரிய கேப்டனுக்கு நினைவஞ்சலி என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவா் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சனிக்கிழமை (டிச. 28) தேமுதிகவின் அழைப்பை ஏற்று விஜயகாந்தின் நினைவிடத்துக்கு வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் விஜயகாந்த் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதேபோன்று விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வந்த இந்திய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அஞ்சலி செலுத்தினார். அரசியல் கட்சி தலைவர்கள். பிரபலங்கள் என ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

என் அன்புக்குரிய கேப்டனுக்கு நினைவஞ்சலி

இந்த நிலையில் ,கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு நாளில்,என் அன்புக்குரிய கேப்டனுக்கு நினைவஞ்சலி என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சரத்குமார் அஞ்சலி

தேமுதிக நிறுவனரும் அருமை நண்பருமான கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவுநாளில் இதய அஞ்சலியை செலுத்துகிறேன் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →