புல்வாமா வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி!
புல்வாமா வீரர்களின் தியாகம் பற்றி பிரதமர் மோடி கூறுவது...
புல்வாமா தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வீரர்களின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
புல்வாமா தாக்குதலின் 7-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று பிப்ரவரி 14 அனுசரிக்கப்படுகிறது.
கடந்த 2019-ஆம் ஆண்டு இதே நாளில் ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ராணுவ வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த துயர சம்பவத்தில் 40 சிஆர்ஃபிஎப் வீரர்கள் உயிரிழந்தனர்.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில்,
2019-ம் ஆண்டு இந்த நாளில் புல்வாமாவில் தங்கள் உயிரைத் தியாகம் செய்த துணிச்சலான வீரர்களை நினைவு கூர்கிறேன்.
அவர்களது தேசத்திற்கான சேவை நம் உணர்வில் என்றும் பதிந்திருக்கும். ஒவ்வொரு இந்தியர்களும் அவர்களின் துணிச்சலைக் கண்டு உத்வேகம் பெறுகின்றனர். இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
Prime Minister Modi has posted a message remembering the sacrifice of soldiers on the 7th anniversary of the Pulwama attack.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.