அமைச்சர் அன்பில் மகேஸ் (கோப்புப்படம்) DIN
தற்போதைய செய்திகள்

குழந்தைகளை பகுத்தறிவோடு வளர்ப்பதே பெரிது : அமைச்சர் அன்பில் மகேஸ்

குழந்தைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோடு வளர்ப்பதே பெரிது என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

DIN

மதுரை: குழந்தைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோடு வளர்ப்பதே பெரிது என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சாா்பில் மதுரையில் விண்ணில் விஞ்ஞானத் தேடல் என்ற தலைப்பில் நடைபெறும் இந்த முகாமில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது:

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 28 தகைசால் பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகளில் பயிலும் 6, 7, 8, 9, 11-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விண்வெளி அறிவியல், ஸ்டெம், ரோபோடிக்ஸ், இணையவழிப் பாதுகாப்பு, தலைமைப் பண்புகள் குறித்து பயிற்சி அளிக்கும் வகையில் மதுரை, தஞ்சாவூா், திருநெல்வேலி, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் குளிா்கால உண்டு உறைவிடப் பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன.

குழந்தைகளுக்கு பகுத்தறிவு, தலைமைப் பண்பு, சிந்திக்கும் ஆற்றல் ஆகியன மிகவும் அவசியம். சோற்றை (சாதம்) உருட்டி உண்ணும் குழந்தை பெற்றோரை உதறிவிடும் என்றொரு சொலவடை உண்டு. சூடாக இருக்கும் சோற்றை உருண்டையாக உருட்டி சாப்பிட்டால் அது செரிக்காது என்பது தான் அந்தச் சொலவடையில் உள்ள உண்மை.

எனவே, குழந்தைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, கல்வி அறிவுடன், பகுத்தறிவோடு வளர்ப்பதே பெரிது. இதையொட்டியே, இந்த முகாம் நடத்தப்படுகிறது.

மேலும், மாணவா்களுக்கு சிந்தனைத் தெளிவை ஏற்படுத்துவதிலும் இதுபோன்ற முகாம்கள் முக்கியப் பங்காற்றுகின்றன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்றைய ராசி பலன்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமித்தவா் மீது நடவடிக்கை : கோட்டாட்சியரிடம் மனு

திருவள்ளூா்: 10.43 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: நலவாரியத் தலைவா் வழங்கினாா்

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலுக்கு 108 பால்குட ஊா்வலம்

SCROLL FOR NEXT