தற்போதைய செய்திகள்

ரோஜா - 2 தொடர் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!

ரோஜா தொடர் இரண்டாம் பாகத்தின் ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

ரோஜா தொடர் இரண்டாம் பாகத்தின் ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சன் தொலைக்காட்சியில் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வந்த 'ரோஜா' தொடர், கடந்த 2022 டிசம்பரில் நிறைவு பெற்றது.

ரோஜா தொடரில், ரோஜாவாக பிரியங்கா நல்காரியும், அவரது கணவர் அர்ஜுனாக ஷிபு சூர்யனும் நடித்திருந்தனர். இருவரது நடிப்பும் ரசிகர்களைக் கவர்ந்து நிலையில், டிஆர்பி பட்டியலில் முன்னணியில் இத்தொடர் இடம் பெற்று இருந்தது.

இதையும் படிக்க: பிக் பாஸ் 8: இந்த வாரம் 2 பேர் வெளியேற்றம்!

இத்தொடருக்கு கிடைத்த வரவேற்பையடுத்து, ரோஜா தொடரின் இரண்டாம் பாகம் விரைவில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக சரிகம தயாரிப்பு நிறுவனம் முன்னதாக அறிவித்தது.

ரோஜா தொடரின் முதல் பாகத்தில் நடித்த பிரியங்கா நல்காரியே, இரண்டாம் பாகத்திலும் நாயகியாக நடிக்கிறார். இத்தொடரை சரிகம நிறுவனம் தயாரிக்கிறது.

பிரியங்கா நல்காரிக்கு ஜோடியாக மூன்று முடிச்சு தொடர் நாயகன் நியாஸ் நடிக்கிறார். மேலும் இத்தொடரில் எதிர்நீச்சல் நடிகை ஹரிப்பிரியா நடிக்கிறார்.

இந்த நிலையில், ரோஜா - 2 தொடர் சரிகம யூடியூப் சேனலில் ஜனவரி 6 ஆம் தேதிமுதல் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி முன்னாள் அமைச்சர் சௌரவ் பரத்வாஜ் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்!

குழந்தைகளைப் போல எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது! - முதல்வர் ஸ்டாலின்

பஞ்சாபிலும் காலை உணவுத் திட்டம் கொண்டுவர விரும்புகிறேன்: பகவந்த் மான்

ரைட் சகோதரர்கள் கண்டுபிடிப்புக்கு முன்பே புஷ்பக விமானம் இருந்தது! சிவராஜ் செளகான்

SCROLL FOR NEXT