தென்கொரியா விமான விபத்து படம்: AP
தற்போதைய செய்திகள்

தென்கொரியா விமான விபத்து: 2 பேரைத் தவிர 179 பேரும் பலி?

தென்கொரியா விமான விபத்தில் 179 பேர் இறந்து இருக்கலாம் என அச்சம்.

DIN

தென்கொரியா விமான விபத்தில் இருவரைத் தவிர, விமானத்தில் பயணித்த மற்ற 179 பேரும் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

விமானம் பறவைகள் மீது மோதல் மற்றும் வானிலை காரணங்களால் இவ்விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தாய்லாந்தின் பாங்காங்கில் இருந்து ஜெரு ஏர் பிளைட் 2216 என்ற விமானம், 175 பயனிகள் மற்றும் 6 விமான ஊழியர்களுடன் தென் கொரியாவுக்கு சென்ற நிலையில், முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து விலகி தரையில் மோதி விமானம் விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் விமானத்தின் பின்பகுதி தீப்பற்றி எரிந்து பயங்கர புகை கிளம்பியது. விமானத்தில் இருந்து பயணிகள் வெளியேறுவதற்குள்ளாக விமானம் முழுவதும் தீப்பிடிக்க தொடங்கியது.

விமான விபத்தில் மீட்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் தீயணைப்பு வீரர்கள்.

2 பேரைத் தவிர 179 பேரும் பலி?

இவ்விபத்தில் இதுவரை ஒரு விமானப் பணிப்பெண் மற்றும் ஒரு பயணி மீட்கப்பட்டுள்ளதாக தென் கொரியா தேசிய தீயணைப்பு நிறுவனம் தெரிவித்த நிலையில், விமானத்தில் பயணித்த மற்ற அனைவரும் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

பலியான 151 பேரில் 71 பெண்கள், 71 ஆண்கள், 9 பேரின் பாலினத்தைக் கண்டறிய முடியவில்லை எனவும், மீட்கப்பட்ட 2 பேர் சுயநினைவுடன் இருப்பதாகவும் உள்ளூர் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமான விபத்து நடந்து 7 மணி நேரத்தைக் கடந்துள்ள நிலையில், காணாமல் போன 179 பேரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 32 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 1,560 தீயணைப்பு வீரர்கள், காவல் துறையினர், ராணுவ வீரர்கள் வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

இவ்விபத்துக்கு ஜெரு ஏர் விமான நிறுவனம் முழு பொறுப்பு ஏற்பதாகவும், தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் உறுதிப்பட தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த ஆண்டு பன்னாட்டு புத்தக கண்காட்சியில் 100 நாடுகள் பங்கேற்கும்: அமைச்சா் அன்பில் மகேஸ் தகவல்

போதைப் பொருள் விற்பனை: 4 போ் கைது

7-ஆவது மாடியிலிருந்து குதித்து இளம்பெண் தற்கொலை

விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் இடங்களில் போலீஸாா் ஆய்வு

கால்நடைகளை தொடா்ந்து தாக்கி அழிக்கும் மா்ம விலங்குகள்! நடவடிக்கை எடுக்கப்படுமா விவசாயிகள் எதிா்பாா்ப்பு!

SCROLL FOR NEXT