தற்போதைய செய்திகள்

உணவு இடைவேளை: ரோஹித் அதிரடியால் இந்திய அணி 33/3-லிருந்து 100/3க்கு முன்னேற்றம்!

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் ரோஹித் அரைசதம் அடித்துள்ளார்.

DIN

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் ரோஹித் அரைசதம் அடித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில், தற்போது இரு அணிகளும் தலா 1 வெற்றியுடன் சமநிலையில் உள்ளன.

இந்த நிலையில், ராஜ்கோட்டில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அரைசதம் அடித்து அசத்தி வருகிறார்.

தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் மார்க் வுட் பந்தில் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க அடுத்து வந்த ஷுப்மன் கில் டக்கவுட்டானார். பின்னர் வந்த ரஜத் படிதார் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

2 விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீரர்

பின்னர் ஜடேஜா களமிறங்கி ரோஹித்துடன் நிலைத்து ஆடி வருகிறார். ராஜ்கோட்டில் அதிக சராசரி கொண்ட வீரராக ஜடேஜா இருக்கிறார். சராசரி 172 ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.

26.2 ஓவர் முடிவில் இந்திய அணி 100/3 ரன்கள் எடுத்துள்ளது. 33/3 என்ற இக்கட்டான நிலையில் நிலைத்து நின்று ஆடுகிறார்கள் ரோஹித் -ஜடேஜா இணை.

ரோஹித் -52*

ஜடேஜா- 31*

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

“உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் மக்கள்பணி ஆற்ற வேண்டும்!” முதல்வர் MK Stalin | DMK

SCROLL FOR NEXT