தற்போதைய செய்திகள்

பாலாவின் வணங்கான் பட டீசர் குறித்த புதிய அப்டேட்

அருண் விஜய் நடிப்பில் பாலாவின் 'வணங்கான்' டீசர் வெளியீடு தேதி அறிவிப்பு!

DIN

வணங்கான் பட டீசர் குறித்த புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குநர் பாலா இயக்கத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் வணக்கான். இதல் அருண் விஜய் நாயகனாகவும், ரோஷினி பிரகாஷ் நாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன் மிஷ்கின் முக்கியக் கதாபாத்திரத்தில் வருகிறார். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

படத்தை பாலாவின் தயாரிப்பு நிறுவனமான ‘பி ஸ்டூடியோஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. பெரும்பாலான படப்பிடிப்பு கன்னியாகுமரி, திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றது. ஏற்கெனவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் படத்தின் டீசர் பிப்.19ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஆரம்பத்தில் வணங்கான் படம் சூர்யா நடிப்பில் உருவாகி வந்த நிலையில் ஒருசில காரணங்களால் படத்திலிருந்து அவர் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கார்த்தி வெளியிட்ட ஜி.வி. பிரகாஷின் மெண்டல் மனதில் பட முதல் பாடல்!

தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் அபிஷேக் சர்மா..! இஷான், பிரெவிஸ், ஃபர்ஹான் முன்னேற்றம்!

நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!

ஆப்கனில் மீண்டும் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவு!

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் விளையாடவுள்ளோம்; இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்!

SCROLL FOR NEXT