கம்பம்மெட்டு மலைச்சாலையில் ஜீப் கவிழ்ந்து ஓட்டுநர் பலி!
தேனி மாவட்டம் கம்பம்மெட்டு மலைச்சாலையில் பிக் அப் ஜீப் கவிழ்ந்து ஓட்டுநர் வியாழக்கிழமை பலியானார்.
கம்பம்: தேனி மாவட்டம் கம்பம்மெட்டு மலைச்சாலையில் பிக் அப் ஜீப் கவிழ்ந்து ஓட்டுநர் வியாழக்கிழமை பலியானார்.
தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளத்திற்கு பிக்அப் ஜீப் வாகனத்தில் வைக்கோல் பாரம் ஏற்றிக் கொண்டு கம்பம் மெட்டு மலைச்சாலையில் சென்று கொண்டிருந்தது. தண்ணீர் வளைவு என்ற இடத்தில் ஜீப் சென்று கொண்டிருந்த போது சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஜீப் ஓட்டுநர் வாகனத்தின் கீழே சிக்கி பலியானார்.
இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் கம்பம் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.