மோகனின் ஹரா: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
நடிகர் மோகனின் ஹரா திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் மோகனின் 'ஹரா' திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு, நடிகர் மோகன் மீண்டும் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ஹரா'.
இந்த படத்தை இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கியுள்ளார். ஏற்கெனவே இவர் ‘தாதா 87’, ‘பவுடர்’ படங்களை இயக்கியிருந்தார்.
மேலும் இப்படத்தில் யோகி பாபு, சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர். படத்துக்கு ரஷாந்த் அர்வின் இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவுவை பிரகத் முனியசாமி மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், 'ஹரா' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், வரும் ஜூலை 5 ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.