ஆம்ஸ்ட்ராங் (கோப்புப்படம்) 
தற்போதைய செய்திகள்

மயான இடத்தில்தான் அடக்கம் செய்ய முடியும்: ஆம்ஸ்ட்ராங் வழக்கில் நீதிபதி!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவா் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை மயான இடத்தில்தான் அடக்கம் செய்ய முடியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

DIN

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவா் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை மயான இடத்தில்தான் அடக்கம் செய்ய முடியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள கட்சியின் அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்கக் கோரி உயா்நீதிமன்றத்தில் சனிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதுதொடா்பான கோரிக்கை மனு ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியும் வழக்குரைஞருமான பொற்கொடி தரப்பில் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் அளிக்கப்பட்டது.

மாநகராட்சி ஆணையா் எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்த கோரிக்கை தொடா்பாக அவசரமாக விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பொற்கொடி தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி(பொ) அரங்க.மகாதேவனிடம் முறையிடப்பட்டது.

இந்த மனுவை தனி நீதிபதி ஒருவா் விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி உத்தரவிட்டாா். இந்த வழக்கு ஞாயிற்றுக்கிழமை காலை காணொலி மூலம் நீதிபதி வி.பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி வி.பவானி சுப்பராயன், "மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதியில்தான் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அடக்க செய்ய முடியும். சட்டப்படி குடியிருப்புப் பகுதிகளில் அடக்கம் செய்ய முடியாது. ஆம்ஸ்ட்ராங்கின் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும் சட்ட விதிகளை மீற முடியாது.

2,400 சதுர அடி நிலத்தை அரசு வழங்குகிறது அல்லவா? வேறு பெரிய இடம் இருந்தால் சொல்லுங்கள் உத்தரவிடுகிறேன்" என்று தெரிவித்து இவ்வழக்கின் விசாரணையை இன்று(ஜூலை 7) காலை 10.30 மணிக்கு ஒத்திவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை?

வங்கதேசத்தில் விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு!

சரிவில் வர்த்தகமாகும் பங்குச்சந்தை! ஐடி பங்குகள் கடும் சரிவு!!

சேலத்தில் விஜய் பிரசாரம்! நுழைவுச் சீட்டு இருந்தால் மட்டுமே அனுமதி!

சொகுசு கார் விபத்து: தொழிலதிபர் மகன் கைது!

SCROLL FOR NEXT