தோனியின் பிறந்த நாள் கொண்டாட்டம். 
தற்போதைய செய்திகள்

கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய தோனி: வைரல் விடியோ!

தோனியின் பிறந்த நாள் கொண்டாட்டம்: மனைவியுடன் கேக் வெட்டி, ரசிகர்கள் கொண்டாட்டம்

DIN

முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தனது பிறந்த நாளை மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு இன்று 43-ஆவது பிறந்த நாள். இதையொட்டி தனது பிறந்த நாளை மனைவி சாக்‌ஷியுடன் கேக் வெட்டி அவர் கொண்டாடினார்.

இருவரும் மாறி மாறி கேக்கை ஊட்டி தங்களது அன்பை பரிமாறிக்கொண்டனர்.

அப்போது தோனியின் காலை தொட்டு வணங்குவது போல் சாக்‌ஷி விளையாட்டாக சைகை செய்தார். இந்த பிறந்த நாள் நிகழ்வில் பாலிவுட் நடிகர் சல்மான் கானும் கலந்து கொண்டார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஏற்கெனவே ஓய்வுபெற்றுவிட்ட தோனி, தற்போது ஐபிஎல் தொடர்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

தோனியில் பிறந்த நாளையொட்டி அவருக்கு பல்வேறு தரப்பினர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அவரது ரசிகர்களும் இணையதளங்களில் ட்ரெண்ட் செய்து தோனியின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 300 கோடி வசூலித்த நரசிம்மா!

முதலீடு ஈர்க்கவா? குடும்ப முதலீடு செய்யவா? - முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

‘ஜனநாயகன்’ Vs ‘தி ராஜா சாப்’ | Cinema Updates | Dinamani Talkies

யோலோ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

மடகாஸ்கர் மண்டை ஓடுகளும் மறக்க முடியாத அம்பிகி வெறியாட்டமும்!

SCROLL FOR NEXT