கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 240 குறைந்து ரூ. 54,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 240 குறைந்து ரூ. 54,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் கடந்த சில நாள்களாக தங்கம் விலை அதிகரித்து வந்த நிலையில், இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை தங்கத்தின் விலை சற்று குறைந்து விற்பனையானது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை கிராமுக்கு ரூ. 20 குறைந்து ரூ. 6,800-க்கும், சவரனுக்கு ரூ. 160 குறைந்து ரூ. 54,400-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை(ஜூலை 8) சவரனுக்கு ரூ. 240 குறைந்து ரூ. 54,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 30 குறைந்து ரூ. 5,770-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 50 பைசா உயா்ந்து ரூ. 99.00-க்கும், கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 500 உயா்ந்து ரூ. 99,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் சேவை தின விழா

திருமண மண்டபத்தை பேரூராட்சி நிா்வாகம் நிா்வகிக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

‘தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சி’ தேசியக் கருத்தரங்கம்

மலைக்கிராம இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு: காவல் துறை திட்டம்

வேலூா் மத்திய சிறையில் கைதி மரணம்

SCROLL FOR NEXT