சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது மணிமண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் 1710-இல் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில் பிறந்தார். கட்டாலங்குளத்தில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
அவரது பிறந்த நாளை முன்னிட்டு மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டிபாய், வட்டாட்சியர் நாகராஜன் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் கோவில்பட்டி நகர மன்ற தலைவர் கா கருணாநிதி, திமுக ஒன்றிய செயலர்கள் பீக்கிலிப்பட்டி வீ.முருகேசன், ராதாகிருஷ்ணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
மதிமுக சார்பில் தூத்துக்குடி மாவட்ட செயலர் ஆர் எஸ் ரமேஷ், கட்சியின் சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் விநாயகா ஜி ரமேஷ், அம்மா மக்கள் முன்னேற்ற கழக தென்மண்டல செயலர் மாணிக்கராஜா, அழகு முத்துகோன் வாரிசுதாரர்கள் ராணி,மீனாட்சி தேவி, ராஜராஜேஸ்வரி, வீரன் அழகு முத்துக்கோன் நலச்சங்க தலைவர் மாரிசாமி, செயலர் முத்துகிருஷ்ணன், துணைச் செயலர் குமார் உள்பட பலர் அழகு முத்துக்கோன் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.