இந்தியன் - 2 
தற்போதைய செய்திகள்

இந்தியன் - 2 படத்தை வெளியிட தடையில்லை!

இந்தியன் - 2 படத்தை வெளியிட தடையில்லை என மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DIN

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் -2 படத்தை வெளியிட தடையில்லை என மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திரைப்பட இயக்குநா் ஷங்கா் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகா் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் நாளை(ஜூலை 12) வெளியாக உள்ளது.

இந்தத் திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி, மதுரை எச்.எம்.எஸ். குடியிருப்பைச் சோ்ந்த வா்மக் கலை, தற்காப்புக் கலை, ஆராய்ச்சி அகாதெமியின் தலைமை ஆசான் ராஜேந்திரன், மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்தாா்.

அவரது மனுவில், “இந்தியன் திரைப்படத்தில் நடிகா் கமல்ஹாசன் பயன்படுத்திய வா்மக் கலை முத்திரை, நான் பயிற்றுவித்தது. அதனால், எனது பெயா் இந்தப் படத்தில் இடம் பெற்றது. தற்போது, இந்தியன் 2 திரைப்படத்திலும் கமல்ஹாசன் அதே முத்திரையைப் பயன்படுத்தியுள்ளாா். ஆனால், என் அனுமதி பெறாமல் இந்த முத்திரை பயன்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்தியன் 2 திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி செல்வமகேஸ்வரி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது, "இந்தியன் திரைப்படத்தில் ‘வா்மக் கலை தகவல்’ என ராஜேந்திரன் பெயா் பதிவு செய்யப்பட்டது. இந்தியன் 2 திரைப்படத்தில் வா்மக் கலை தொடா்பான பதிவுகள், வா்மக் கலை ஆசான் பிரகாசம் குருக்கள் என்பவரை வைத்து படமாக்கப்பட்டுள்ளது.

இந்தியன் 2 திரைப்படத்துக்கும் வா்மக் கலை ஆசான் ராஜேந்திரனுக்கும் எந்தவொரு தொடா்பும் இல்லை. இந்த வழக்கு தவறானது" என்று இயக்குநா் ஷங்கா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சாய் குமரன் வாதிட்டார். இதனைத் தொடர்ந்து, இந்தியன் 2 திரைப்படக் குழு தரப்பினர் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டது.

இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நடிகர் கமல், இயக்குநர் ஷங்கர், லைகா நிறுவனம் தரப்பில் வழக்குரைஞர்கள் ஆஜராகி தங்களது வாதங்களை முன்வைத்தனர்.

தொடர்ந்து, அனைத்து தரப்பினரின் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், இந்தியன் -2 படத்தை வெளியிட தடையில்லை என்று மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்து ஆசான் ராஜேந்திரன் தொடுத்த மனுவை தள்ளுபடி செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கான நெதர்லாந்து அணி அறிவிப்பு!

ஜகதீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதி

பொங்கல் : போகி பண்டிகைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை!

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

SCROLL FOR NEXT