ஆளுநா் ஆா்.என். ரவி (கோப்புப்படம்) 
தற்போதைய செய்திகள்

மதுவிலக்கு அமலாக்க திருத்தச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட மதுவிலக்கு அமலாக்க திருத்தச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

DIN

தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட மதுவிலக்கு அமலாக்க திருத்தச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட மதுவிலக்கு அமலாக்க திருத்தச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான சட்டத் திருத்த மசோதா (தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937) தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஜூன் 29-ல் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

மதுவிலக்குச் சட்டத்தில் உள்ள பிரிவுகளை ஏய்க்கவோ அல்லது செல்லாதபடி செய்வதற்கு உடன்பாட்டாலோ ஓராண்டுக்கு குறையாத மூன்றாண்டுகள் வரை நீட்டிக்கும் சிறைத் தண்டனையும், ரூ.50 ஆயிரத்துக்கு குறையாத ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று சட்டத் திருத்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

மது அல்லது போதையை விளம்பரப்படுத்தினால் சிறைத் தண்டனையும், அபராதமும் இந்த சட்டத் திருத்த மசோதாவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கள்ளச்சாராயம் அருந்துவதால் மரணம் ஏற்பட்டிருந்தால், அந்த சம்பவத்தில் தொடா்புடையவா்களுக்கு ஆயுள் காலம் வரை கடுங்காவல் சிறையும், ரூ.10 லட்சத்துக்கு குறையாத அபராதத் தொகையும் விதிக்கப்படும் என்று இந்த சட்டத் திருத்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் இந்த மதுவிலக்கு அமலாக்க திருத்தச் சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணியின் த்ரில் வெற்றியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் மாற்றம்!

மறைந்த தாயின் வங்கிக் கணக்கு! ஒரே நாளில் ஷாருக் கானை விட பணக்காரரான இளைஞர்!

சத்தீஸ்கரில்.. நக்சல்கள் வெடிகுண்டு தாக்குதல்! இளைஞர் படுகாயம்!

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம்! இன்னொருபுறம் பாஜக கொண்டாட்டம்

நீ முல்லைத்திணையோ... அருள்ஜோதி!

SCROLL FOR NEXT