ஆம்பூர் அருகே விவசாய நிலத்தில் ஒற்றைக்காட்டு யானை தஞ்சம் அடைந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் யானையை காட்டுக்குள் அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே கீழ் முருங்கை பகுதியில் சனிக்கிழமை இரவு தேசிய நெடுஞ்சாலை வழியாக ஒற்றைக் கொம்பு காட்டு யானை ஒன்று திடீரென வந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை மற்றும் காவல்துறையினர் யானையை காட்டுக்குள் அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, திடீரென கீழ் முருங்கை வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலத்தில் யானை தஞ்சம் அடைந்தது. இதையடுத்து சனிக்கிழமை இரவு முதல் தற்போது வரை விரட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட நிலையில், தற்போது கிருஷ்ணகிரி தருமபுரி பகுதியில் வரவழைக்கப்பட்டுள்ள வேட்டை தடுப்பு வன காவலர்கள் பட்டாசு வெடித்து யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.