கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

ஆன்லைன் மூலம் மதுபானம் விற்பனையா? டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம்!

ஆன்லைன் மூலம் மதுபானம் விற்பனை செய்ய தமிழக அரசு திட்டமிடவில்லை என்று டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

DIN

ஆன்லைன் மூலம் மதுபானம் விற்பனை செய்ய தமிழக அரசு திட்டமிடவில்லை என்று டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் பீர், ஒயின், மணமூட்டப்பட்ட மதுவகைகள் போன்ற குறைந்த அளவில் ஆல்கஹால் கொண்ட மதுவகைகளை ஸொமாட்டோ, ஸ்விக்கி, பிக்பேஸ்கட் போன்ற ஆன்லைன் விநியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே கொண்டு சென்று விற்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகவும், அதன் சாதக பாதகங்கள் குறித்து ஆன்லைன் வினியோக நிறுவனங்கள், மது உற்பத்தியாளர்கள் போன்றோருடன் கலந்தாய்வு செய்து வருவதாகவும் செய்தி வெளியானது.

வீடுகளுக்கே சென்று மது விற்க திட்டமிடப்பட்டுள்ளதா என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என்றும், மது வகைகளை ஆன்லைன் விநியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே கொண்டு சென்று விற்பனை செய்யும் திட்டம் இருந்தால் அதை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில், ஆன்லைன் விநியோக நிறுவனங்கள் மூலம் வீடுகளுக்கு சென்று மதுபானம் விற்க தமிழக அரசு திட்டமிடவில்லை என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், இதுபோன்ற எந்த ஒரு புது முயற்சியிலும் டாஸ்மாக் நிர்வாகம் ஈடுபடாது , டெட்ரோ பாக்கெட் எனப்படும் காகித குடுவையில் மதுபானங்களை அறிமுகம் செய்யும் திட்டமும் இல்லை என்றுடாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சசிகுமாரின் மை லார்ட் படத்தின் 2 ஆவது பாடல்!

அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்

மியான்மரில் மருத்துவமனை மீது ராணுவம் வான்வழித் தாக்குதல்! 34 பேர் பலி

டி20 உலகக் கோப்பை டிக்கெட் விற்பனை தொடங்கியது! ஆரம்ப விலை ரூ.100 முதல்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சுவாரசியமான படங்கள்!

SCROLL FOR NEXT