தற்போதைய செய்திகள்

சவுக்கு சங்கர், பெலிக்ஸுக்கு குற்றப்பத்திரிகை நகல்!

சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்ட்க்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

DIN

சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

பெண் போலீஸார் குறித்து அவதூறாக பேசியதாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஆகிய இருவரை கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இருவரின் குற்றப்பத்திரிகை தயார் செய்யப்பட்டது.

இந்நிலையில் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த இருவரையும் போலீஸார் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தினர். பின்பு இருவருக்கும் சைபர் கிரைம் போலீஸாரின் குற்றப்பத்திரிக்கை நகல் நீதிபதி முன்பு வழங்கப்பட்டது. பின்னர் இருவரும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தில் பெலிக்ஸ் ஜெரால்டு தரப்பு வழக்குரைஞர் கென்னடி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், “இந்த வழக்கு சட்டத்திற்கு முரணாக காவல்துறை செயல்பட்டு வருகிறது. அதற்கு அனைவரும் உடந்தையாக இருக்கிறார்கள். அரசியலமைப்பை மீறி தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

அவசரமாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளார்கள் வரவேற்கத்தக்கது.இதே போலவே அனைத்து வழக்குகளிலும் குற்றப்பத்திரிக்கை காவல்துறை தாக்கல் செய்ய வேண்டும் அது தான் நல்லது. மக்களின் பணத்தை வீணாக செலவு செய்கிறார்கள்.

திருப்பூர் நீதிமன்றத்துக்கு வந்த துரைசாமியை கோவைக்கு வரவிடாமல் தடுத்து அவரை புதுக்கோட்டையில் வைத்து காவல்துறையினர் சுட்டு விட்டனர். ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சரணடைந்த ஒருவரை நீதிமன்றத்தில் விசாரிப்பதற்கு முன் அவரை சுட்டு விட்டார்கள். இதில் என்ன நியாயம் இருக்கிறது.

இந்த வழக்கில் சாதாரணமான ஒளிப்பதிவாளர் கைது செய்துள்ளார்கள். சட்டத்திற்கு மாறாக காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். இந்த வழக்கை சட்டத்திற்கு முன்பாக நிரூபிப்போம்” என்று தெரிவித்தார்.

மேலும், பல்வேறு கட்சியினர் அவதூறாக பேசி வருகிறார்கள். ஆனால், அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் சீமான் கூட கொச்சையாக பேசியிருக்கிறார் அதைப்பற்றி காவல்துறையினர் கண்டு கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொல்லாமலே... சாக்‌ஷி அகர்வால்!

காதலின் மொழி... அஹானா கிருஷ்ணா

அழகும் மனமும்... நர்கிஸ் ஃபக்ரி!

விடுபட்டவர்களுக்கு டிசம்பர் முதல் மகளிர் உரிமைத்தொகை: துணை முதல்வர் உதயநிதி

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT