மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1.25 லட்சம் கன அடி நீர் திறக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.84 அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 23,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 91.63 டிஎம்சியாக உள்ளது.
விரைவில் அணை முழு கொள்ளளவை எட்டவுள்ளதால், உபரி நீரை வெளியேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து 1.25 லட்சம் கன அடி நீர் திறக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 16 கண் மதகுகள் வழியாக 75,000 முதல் 1.25 லட்சம் கன அடி வரை நீர் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், காவிரி கரையோரம் வசிக்கும் 11 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், காவிரி கரையோரத்திலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.