மிர்சாபூர் மக்களவைத் தொகுதியின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரும் அப்னா தளம் (சோனேலால்) தலைவருமான அனுப்ரியா படேல்.  
தற்போதைய செய்திகள்

இந்தியா கூட்டணி சீட்டுக்கட்டு போல் கலைந்துவிடும்: அனுப்ரியா படேல்

தேர்தல் முடிவுக்கு பின்னர் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி சீட்டுக்கட்டு போல் கலைந்து விடும் என்கிறார் அனுப்ரியா படேல்

DIN

மிர்சாபூர் (உத்தரப்பிரதேசம்): மக்களவைத் தேர்தலின் ஏழாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை தொடங்கிய நிலையில், தேர்தல் முடிவுக்கு பின்னர் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி சீட்டுக்கட்டு போல் கலைந்து விடும் என மிர்சாபூர் மக்களவைத் தொகுதியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரும் அப்னா தளம் (சோனேலால்) தலைவருமான அனுப்ரியா படேல் தெரிவித்தார்.

ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவான 2024 மக்களவைத் தேர்தலின் ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு உத்தரப்பிரதேசத்தின் 13 தொகுதிகள் உட்பட 57 தொகுதிகளிலும் சனிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் மிகுந்த உற்சாகத்தோடு வாக்களித்து வருகின்றனர்.

மிர்சாபூர் மக்களவைத் தொகுதியின் பாஜக கூட்டணி (என்டிஏ) வேட்பாளர் அனுப்ரியா படேல் மிர்சாபூரில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மிர்சாபூர் மற்றும் சோன்பத்ரா ஆகிய இரு தொகுதிகளிலும் நான் வெற்றி பெறுவேன். "ஜூன் 4 ஆம் தேதி வரை காத்திருங்கள், எல்லாம் தெளிவாகிவிடும். இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஹாட்ரிக் வெற்றி பெறும். மோடி தலைமையில் மூன்றாவது முறையாக நாட்டில் வலுவான ஆட்சி அமைக்கப்படும். தேர்தல் முடிவுக்கு பின்னர் இந்தியா கூட்டணி சீட்டுக்கட்டு போல கலைந்து விடும் என அனுப்ரியா படேல் கூறினார்.

"நாட்டின் வளர்ச்சியைப் பொறுத்த வரையில்,கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் முன்னேற்றத்துக்காக நாங்கள் உழைத்துள்ளோம். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஐந்தாவது இடத்தில் இருந்த இந்தியாவின் பொருளாதாரத்தை இன்று உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக மாற்றியுள்ளோம். நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் பெரிய அளவில் விரிவடைந்துள்ளது" என்று படேல் கூறினார்.

2014 மக்களவைத் தேர்தலில் மிர்சாபூர் தொகுதியில் போட்டியிட்டு 2.19 லட்சம் வாக்குகள் வித்தியாத்தில் வெற்றி பெற்ற அனுப்ரியா படேல், 2019 இல் 2.32 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில், சமாஜ்வாதி கட்சியின் ரமேஷ் பிந்த் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் மணீஷ் திரிபாதி ஆகியோரை எதிர்த்து போட்டியிடுகிறார்.

ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் களத்தில் உள்ள மொத்தம் 906 வேட்பாளர்களில் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவர், இதில் வாக்களிக்க தகுதிபெற்ற மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை சுமாா் 10.06 கோடி. இதில் ஆண்கள் 5.24 கோடி, பெண்கள் 4.82 கோடி, மூன்றாம் பாலினத்தவா் 3,574 போ். இவா்கள் வாக்களிக்க வசதியாக, 1.09 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஏற்கெனவே நடந்து முடிந்த 6 கட்டத் தோ்தல்களில் முறையே 66.14%, 66.71%, 65.68%, 69.16%, 62.2%, 63.36% வாக்குகள் பதிவாகியுள்ளன.இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் இறுதிக்கட்டத் தோ்தலுக்கு பின் ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT