லடாக் மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் முகமது ஹனீபா 27,906 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் செரிங் நம்கியாலை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
முகமது ஹனீபா 65,303 வாக்குகளைப் பெற்ற நிலையில், காங்கிரஸின் செரிங் நம்கியால் 37,397 வாக்குகளும், பாஜகவின் தாஷி கியால்சன் 31,956 வாக்குகளும் பெற்றனர்.
1967ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தத் தொகுதியில் வெற்றி பெற்ற நான்காவது சுயேட்சையாக தேசிய மாநாட்டின் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவரான முகமது ஹனீபா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
1989, 2004 மற்றும் 2009 பொதுத் தேர்தல்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.