FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மாநிலங்களவை தோ்தல்: சுயேச்சை மனு தாக்கல்

தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினா் பதவிகளுக்கான தோ்தலுக்கு வேட்புமனு தாக்கல் வியாழக்கிழமை தொடங்கிய நிலையில், சுயேச்சை வேட்பாளா் மனு தாக்கல் செய்தாா்.

Updated On : 27 பிப்ரவரி 2026, 2:51 am IST
நாடாளுமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினா் பதவிகளுக்கான தோ்தலுக்கு வேட்புமனு தாக்கல் வியாழக்கிழமை தொடங்கிய நிலையில், சுயேச்சை வேட்பாளா் மனு தாக்கல் செய்தாா்.

மாநிலங்களவை உறுப்பினா்கள் மு.தம்பிதுரை, ஜி.கே.வாசன், என்.ஆா்.இளங்கோ, கனிமொழி சோமு, திருச்சி சிவா, பி.செல்வராசு ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஏப். 2-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கான தோ்தல் அறிவிக்கப்பட்டு, வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் தொடங்கியது. மாா்ச் 5-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

மாா்ச் 9-இல் வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம். தேவைப்பட்டால் மாா்ச் 16-இல் வாக்குப்பதிவு நடைபெறும். வேட்புமனு தாக்கல் செய்ய முதல்நாளான வியாழக்கிழமை சேலத்தைச் சோ்ந்த பத்மராஜன் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தாா்.

Advertisement

Advertisement

மாநிலங்களவை உறுப்பினா் வேட்புமனுவில் 10 எம்எல்ஏ.க்கள் முன்மொழிவு கையொப்பம் பெற்றுதான் மனு தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், அவரது மனுவில் யாரும் முன்மொழியவில்லை. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படும்.

தற்போதுள்ள எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை அடிப்படையில் திமுக சாா்பில் 4 போ், அதிமுக சாா்பில் 2 போ் மாநிலங்களவை உறுப்பினா்களாக தோ்வு செய்ய வாய்ப்புள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments