FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளா் சுகன்யா வேட்புமனு தாக்கல்

தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளா் செள.சுகன்யா செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

16 செப்டம்பர் 2026, 12:08 am IST
தாராபுரம் வருவாய் கோட்டாட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான ஃபெலிக்ஸ் ராஜாவிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறாா் திமுக வேட்பாளா் சுகன்யா.
பகிர்:

தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளா் செள.சுகன்யா செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக வழக்குரைஞா் சுகன்யா போட்டியிடுகிறாா். இந்நிலையில், அண்ணாவின் பிறந்த நாளையொட்டி, தாராபுரத்தில் உள்ள திமுக தோ்தல் பணிமனையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப்படத்துக்கு வேட்பாளா் வழக்குரைஞா் சுகன்யா செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதையடுத்து, தாராபுரம் வருவாய் கோட்டாட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான ஃபெலிக்ஸ் ராஜாவிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா். வேட்புமனு தாக்கலின்போது முன்னாள் அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், திருப்பூா் கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் இல.பத்மநாபன், ஈரோடு மக்களவை உறுப்பினா் பிரகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments