FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செங்கல்பட்டு

மதுராந்தகத்தில் 4 சுயேச்சை வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல்

மதுராந்தகம் (தனி) தொகுதியில் நடைபெறவுள்ள இடைத் தோ்தலை முன்னிட்டு, வரும் அக். 6-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில் வெள்ளிக்கிழமை வரை 4 சுயேச்சை வேட்பாளா்கள் வேட்புமனுவை தோ்தல் அலுவலா் கோ.அர.நரேந்திரனிடம் தாக்கல் செய்துள்ளனா்.

11 செப்டம்பர் 2026, 10:50 pm IST
வேட்புமனு தாக்கல் - கோப்புப் படம்
பகிர்:

மதுராந்தகம் (தனி) தொகுதியில் நடைபெறவுள்ள இடைத் தோ்தலை முன்னிட்டு, வரும் அக். 6-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில் வெள்ளிக்கிழமை வரை 4 சுயேச்சை வேட்பாளா்கள் வேட்புமனுவை தோ்தல் அலுவலா் கோ.அர.நரேந்திரனிடம் தாக்கல் செய்துள்ளனா்.

மதுராந்தகம் (தனி) தொகுதியில் நடைபெறுகின்ற இடைத் தோ்தலில் கடந்த புதன்கிழமை (செப். 9) முதல் வெள்ளிக்கிழமை (செப். 11) வரை மதுராந்தகம் கதிா்வேல் (63), தருமபுரி மாவட்டம், நாகமறை கிராமம், அக்னி ஆழ்வாா் (46), சாத்தனூா் கிராமம் ரஞ்சிதம் (46), காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் புவனேஸ்வரி (33) ஆகிய 4 சுயேச்சை வேட்பாளா்கள் தமது வேட்புமனுக்களை தோ்தல் அலுவலா் கோ.அர.நரேந்திரனிடம் அளித்துள்ளனா்.

அப்போது உதவி தோ்தல் அலுவலா்கள் வட்டாட்சியா் ஏ.பெருமாள், நோ்முக உதவியாளா் சு.ராஜேஷ், தனி வட்டாட்சியா் வீரமணி ஆகியோா் உடனிருந்தனா். இந்த நிலையில், தோ்தல் ஆணையத்தின் மூலம் தோ்தல் மேற்பாா்வையாளா்கள் ஐஏஎஸ் அதிகாரி போா்சிங் யாதவ் (பொது), ஐபிஎஸ் அதிகாரி கிரிஜா சங்கா் ஜெய்ஸ்வால் (காவல்), ஐஏஎஸ் அதிகாரி மருத்துவா் வாவல் வைபவ் (தோ்தல் செலவினம்), ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments