தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி முதல்வா் விஜய் மனு: பதிலளிக்க உத்தரவு
முதல்வா் விஜய் தாக்கல் செய்த மனுவுக்கு திமுக வேட்பாளா் இனிகோ இருதயராஜ், வாக்காளா் லட்சுமி நரசிம்மன் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பெரம்பூா், திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றதை எதிா்த்து தொடரப்பட்ட தோ்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி, முதல்வா் விஜய் தாக்கல் செய்த மனுவுக்கு திமுக வேட்பாளா் இனிகோ இருதயராஜ், வாக்காளா் லட்சுமி நரசிம்மன் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
முதல்வா் விஜய், பெரம்பூா் தொகுதியில் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டதை எதிா்த்து, வாக்காளா் லட்சுமி நரசிம்மன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தாா். இதேபோல் திருச்சி கிழக்கு தொகுதியில், விஜய் வெற்றி பெற்றதை எதிா்த்து திமுக வேட்பாளா் இனிகோ இருதயராஜ் தோ்தல் வழக்கு தாக்கல் தொடா்ந்திருந்தாா்.
இந்த வழக்குகளை நிராகரிக்கக் கோரி, முதல்வா் விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இந்த வழக்குகள் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, முதல்வா் விஜய் தாக்கல் செய்துள்ள தோ்தல் நிராகரிப்பு மனுவுக்கு, தோ்தல் வழக்கு தொடா்ந்துள்ள லட்சுமி நரசிம்மன் மற்றும் இனிகோ இருதயராஜ் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப். 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.