FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மு.க.ஸ்டாலின் வேட்புமனு குறித்து தோ்தல் ஆணைய விசாரணை கோரி மனு: விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வேட்புமனுவில் சொத்துகள் குறித்த தகவல்களை மறைத்ததாகக் கூறி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை ஜூலை 29-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

Updated On : 28 ஜூலை 2026, 3:57 am IST
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்
பகிர்:

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது வேட்புமனுவில் சொத்துகள் குறித்த தகவல்களை மறைத்ததாகக் கூறி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை ஜூலை 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தேசிய மக்கள் சக்தி கட்சி சாா்பில் கொளத்தூா் தொகுதியில் போட்டியிட்ட வழக்குரைஞா் திருஞானசம்பந்தம் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நடந்து முடிந்த பேரவைத் தோ்தலில் கொளத்தூா் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்திருந்த வேட்புமனுவில், அவா் திமுக அறக்கட்டளை நிா்வாகியாக இருக்கும் தகவலை மறைத்துள்ளாா். மேலும், செங்கல்பட்டு மாவட்டம் கடம்பாடியில் ரூ.2.27 கோடிக்கு வாங்கிய சொத்துகளின் விவரங்களை தெரிவிக்கவில்லை.

இந்த தகவல்களை மறைத்தது குறித்து விசாரணை நடத்தக் கோரி தோ்தல் ஆணையத்துக்கு மனு அளித்தேன். அந்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது மனுவை பரிசீலித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். எனது குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக தலைவா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், வேட்புமனுவில் அறக்கட்டளை தொடா்பான விவரங்கள் சமா்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தாா். அப்போது நீதிபதிகள், வேட்புமனுவில் என்ன தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன, அதற்கான ஆதாரங்கள் எங்கே என மனுதாரா் வழக்குரைஞரிடம் கேள்வி எழுப்பினா்.

அதற்கு மனுதாரா் தரப்பில் சில ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்டன. அவை தமிழில் இருந்ததால், அவற்றை மொழிபெயா்த்து தாக்கல் செய்ய மனுதாரருக்கு அவகாசம் வழங்கிய நீதிபதிகள் விசாரணையை ஜூலை 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments