பழைய ஹைதராபாத் நகரத்தில் மட்டும் அதிகம் அறியப்பட்ட ஒரு அமைப்பின் தலைவராக இருந்த அசாதுதீன் ஒவைசி, சமீப ஆண்டுகளில் நாட்டின் முஸ்லிம்களின் சக்திவாய்ந்த குரலாக உருவெடுத்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை, ஹைதராபாத் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி 3.38 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தனது போட்டியாளரான பாஜகவின் மாதவி லதாவை 3.38 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து 5-ஆவது தொடர் வெற்றியை ஒவைசி பதிவு செய்துள்ளார்.
1984 முதல் வெற்றியை நழுவவிடாத ஏஐஎம்ஐஎம் கட்சியின் பழைய ஹைதராபாத் நகரத்தின் மீது ஒவைசி குடும்பத்தின் இரும்புப் பிடியின் சான்றாக இந்த தேர்தல் மீண்டும் உறுதி செய்துள்ளது.
"பாஜகவின் பி டீம்" என்ற விமர்சனத்தால் துவண்டு போகாத ஒவைசி, குறைந்த வெற்றியைப் பெற்றாலும், கட்சியை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
அவரது தலைமையின் கீழ், மகாராஷ்டிரம் மற்றும் பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் ஏஐஎம்ஐஎம் தேர்தல் வெற்றிகளைப் பெற்றுள்ளது.
வழக்குரைஞரான ஒவைசி, உருது மற்றும் ஆங்கிலத்தில் மிகவும் தெளிவாக பேசும் திறமையான தொடர்பாளர் ஆவார், எந்த விவாதத்திலும் அவரால் எதிரிகளை தனது விவாத திறமையால் ஆட்படுத்தும் திறன் பெற்றவர்.
நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக வாக்களித்த இரண்டு உறுப்பினர்களில் அவரும் அவரது மக்களவை சகாவான இம்தியாஸ் ஜலீலும் இருந்தபோது, அவர் தனிப் பாதையில் செல்லத் தயங்கியதில்லை.
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ஐ கடுமையாக விமர்சித்த ஒவைசி, சிஏஏ, என்ஆர்சி மற்றும் என்பிஆர் ஆகியவற்றுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
ஏஐஎம்ஐஎம் 'போராளிகளின்' கட்சி என்றும் (ஹைதராபாத்தில் முந்தைய நிஜாம் ஆட்சியைப் பாதுகாத்த ஒரு தனியார் போராளிகள்) என்றும், பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் மீது அவர் செல்வாக்கு செலுத்துவதாகவும் பாஜக தலைவர்கள் அடிக்கடி குற்றம் சாட்டும்போது அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க தவறியதில்லை.
மே 13, 1969 இல் பிறந்த அசாதுதீன் ஒவைசி, 1994 ஆம் ஆண்டு பிரிக்கப்படாத ஆந்திரம் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் ஹைதராபாத்தில் உள்ள சார்மினார் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1999 தேர்தலில் அதே தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் 2004 இல் ஹைதராபாத்தில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார், பின்னர் 2009, 2014 மற்றும் 2019 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட தொழிலதிபரும் நடன கலைஞருமான மாதவி லதாவை களமிறக்கியதும் உற்சாகமான போட்டியை எதிர்கொண்ட ஒவைசி, வாக்கு எண்ணிக்கை முடிவில் 3.38 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஆறு முறை எம்.பி மற்றும் ஐந்து முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த அவரது தந்தை மற்றும் புகழ்பெற்ற முஸ்லீம் தலைவரான சுல்தான் சலாவுதீன் ஒவைசியின் மறைவுக்குப் பிறகு 2008 இல் ஏஐஎம்ஐஎம் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஒவைசி.
நாட்டில் உள்ள முஸ்லிம்கள் உள்ளிட்ட மத சிறுபான்மையினரின் நலனைக் கவனிக்க சிறுபான்மை விவகாரங்களுக்கான பிரத்யேக அமைச்சகத்தை அமைக்க மத்திய அரசை வற்புறுத்துவதில் அசாதுதீன் ஒவைசி முக்கியப் பங்காற்றியுள்ளார்.
2004 ஆம் ஆண்டு பிரிக்கப்படாத ஆந்திரத்தில் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய முஸ்லிம்களுக்கு நான்கு சதவிகித இடஒதுக்கீட்டைப் பெறுவதற்காக அசாதுதீன் ஒவைசி பாடுபட்டுள்ளார்.
தற்போது, ஒரு அமைப்பின் தலைவராக இருந்த அசாதுதீன் ஒவைசி, நாட்டின் முஸ்லிம்களின் சக்திவாய்ந்த குரலாக உருவெடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.